அல்லுச்சில்லு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அல்லுச்சில்லு

சொல் பொருள்

அல்லு – அல்லலைத் தரும் பெருங்கடன். சில்லு – சிறிது சிறிதாக வாங்கிய சில்லறைக் கடன்.

விளக்கம்

அல்லுச் சில்லு இல்லாமல் கணக்கைத் தீர்த்துவிட்டேன்” என்று மகிழ்வுடன் கூறுபவர் உரையைக் கேட்கும்போது அவர்கள் அல்லுச்சில்லால் பட்ட துயரம் தெரியவரும். சில்லு என்பது சிறியது; சில்லி, சில்லுக் கருப்புக்கட்டி, தேங்காய்ச் சில்லு என்பவனற்றால் சில்லுக்குச் சிறுமைப் பொருள் உண்மை அறியலாம். இனி, அல்லு அல்லலையும் சில்லு சிறுமையையும் தருவதாகவும் அமைகிறது. அவனுக்கு அல்லுச் சில்லு எதுவும் இல்லை; அமைதியான வாழ்வு என்னும் பாராட்டால் இது விளங்கும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்லுச்சில்லு&oldid=1913255" இலிருந்து மீள்விக்கப்பட்டது