அளவுகருவி
மானம் என்பதன் அடிப்படையிலான மானி என முடியும் கருவிகள் பெயர்களையும் அவ்வாறு புதியன புனைந்தும் பட்டியல் வைத்துள்ளேன். மேலும் சேர்க்க வேண்டியவை இருப்பின் சேர்த்து அனுப்புகின்றேன். சான்றுக்குச் சில 1. உட்கவர் மானி 2. முடுக்கமானி 3. கதிர்வீச்சு மானி 4. காரமானி 5. உயரமானி 6. காற்றுமானி 7. மின்னோட்டமானி 8. விரைவுமானி 9. அழுத்தமானி 10. ஒப்படர்த்திமானி 11. ஈர்ப்புத்திருக்கை மானி 12. ஈர்ப்பு அலைமானி 13. வெள்ளியுப்புமானி 14. கேட்புநோக்கி 15. கேளொலிமானி 16. வளரிமானி 17. எரி வெம்மி மானி 18. நீராவி அழுத்தமானி 19. நீ்ர்மமிலி உயரமானி 20. காடிமானி மேலும் அளவி, நோக்கி, வரைவி என முடியும் கருவிகள் பெயர்ப்பட்டியலும் உருவாக்கியுள்ளேன். உரிய ஆங்கிலச் சொற்களுடன் பின்னர் நான் அளிக்கின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /