அள்ளி முள்ளி
Appearance
அள்ளி முள்ளி
சொல் பொருள்
அள்ளுதல் – கை கொள்ளுமளவு எடுத்தல் முள்ளுதல் – விரல் நுனிபட அதனளவு எடுத்தல்.
விளக்கம்
தருதல் வகையுள் அள்ளித் தருதலும், முள்ளித் தருதலும் உண்டு. தருவார் மனநிலையும், கொள்வார்க்கும் கொடுப்பார்க்கும் உள்ள நேர்வும் அள்ளித் தருதலாலும் முள்ளித் தருதலாலும் விளங்கும்.
ஏதோ கொடுக்க வேண்டுமே என்னும் கடனுக்காக, அள்ளித் தருதலாலும் முள்ளித் தந்து ஒப்பேற்றி விடுவதும் கண்கூடு.
அள்ளிமுள்ளித் தின்னுதல் என்பதும் வழக்கு. அள்ளித்தின்னல் சோறு; முள்ளித் தின்னல் கறி வகைகளும் தீனிவகைகளுமாம்.