அழிந்து ஒழிந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அழிந்து ஒழிந்து

சொல் பொருள்

அழிந்து – கெட்டுப்போதல் ஒழிந்து – அற்றுப் போதல்.

விளக்கம்

அழிந்து ஒழிந்து போனது;” “அழிந்தொழிந்து போக நேரம் வந்துவிட்டதா?” என்பவை வழக்கு மொழிகள்.

அழிதல், அழிந்துபடுவதும், அழிந்ததற்குச் சான்று இருப்பதும் ஆகும்.

ஒழிதல், அழிந்ததன் தடமும் இல்லாமல் மறைந்து போவதாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழிந்து_ஒழிந்து&oldid=1913086" இலிருந்து மீள்விக்கப்பட்டது