ஆட்டம்பாட்டம்
Appearance
ஆட்டம்பாட்டம்
சொல் பொருள்
ஆட்டம் – தாளத்திற்குத் தக்கோ, தகாதோ ஆடுவது ஆட்டம் பாட்டம் – ஆட்டத்திற்குத் தக்கோ, தகாதோ பாடுவது பாட்டம்
விளக்கம்
பாட்டு, பாட்டம் என வழங்குதல் இதனால் அறியலாம். சொல்லால் ஆடுதல் பாடுதல்களைக் குறிப்பதாயினும், இலக்கணையாய் வேறு குறிப்பினதாம்.
பிறரைப் படாப்பாடு படுத்திய கொடியவர்களுக்கும் முதுமை, வறுமை, நோய்மை முதலியன வந்து வாட்டுமல்லவோ! அந்நிலையில் அவர் தம் பழநாள் கொடுமைகளைச் செய்ய இயலாதவராய் அயர்ந்து ஒடுங்கி ‘என்ன?’ என்று கேட்பதற்கும் ஆளின்றிக் கிடப்பரன்றோ! அந்நிலையில் அவரை ‘ஆட்ட பாட்டமெல்லாம் ஒடுங்கிவிட்டது. அவர் ஆடிய ஆட்ட மென்ன? பாட்டமென்ன? எல்லாம் எங்கே போனது?” என்று இகழும் வழக்கைத் தழுவியது இது.