ஆண்டாண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
'ஆண்டாண்டு' என்றச் சொல்லை ஔவையார் எப்படிப் பயன்படுத்துகிறார் கவனியுங்கள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆண்டாண்டு, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. ஒவ்வொரு ஆண்டு(ம்)
  2. ஆண்டுக்குப்பின் ஆண்டு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. year after year

விளக்கம்[தொகு]

தொடர்ச்சியாக ஓர் ஆண்டு கடந்தால் பின் வரும் ஆண்டுகள் எனப் பொருள்படும்

பயன்பாடு[தொகு]

குமரன் சேர்த்துவைத்த செல்வம் 'ஆண்டாண்டு'க்கும், மேலும் மேலும் சேர்க்காமலேயே , அவரது குடும்பத்திற்கு போதுமானதாகும்.

இலக்கியமை[தொகு]

ஆண்டாண்டு... தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்.
நல்வழி--- ஔவையார்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆண்டாண்டு&oldid=1221292" இலிருந்து மீள்விக்கப்பட்டது