ஆதிமூலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆதிமூலமான பிரம்மா, விட்டுணு, சிவன்
ஆதிமூலமான விட்டுணுவை உதவிக்கு அழைக்கும் கசேந்திரன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆதிமூலம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. அடிப்படை/முதற்காரணம்
  2. முதற்காரணமான கடவுள்
  3. ஆதி கடவுள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the original/root cause
  2. the almighty
  3. the supreme being

விளக்கம்[தொகு]

  1. எல்லா செயல்கள்/நிகழ்வுகளுக்கும் அவை நடைபெற/தோன்ற அடிப்படை/முதற்காரணம் என்று ஒன்று கட்டாயம் இருக்கும்...அதுவே ஆதிமூலம் எனப்படுகிறது...
  2. அகிலம்/பிரபஞ்சம் இயங்க முழுமுதற் காரணனான இறைவனையும் ஆதிமூலம் என்றே அழைப்பர்...இந்து சமயத்தில் பிரம்மா, விட்டுணு, சிவன் ஆகிய ஆதிகடவுளின் சக்திகளே பிரபஞ்ச இயக்கங்களுக்கு முதற் காரணமானதால் அவர்கள் அனைவரையுமே ஆதிமூலம் என்றனர்...தனித்தனியாக ஆதி பிரம்மன், ஆதிவிட்டுணு,ஆதிசிவன் என்பார்கள்...கசேந்திரன் என்னும் யானையின் காலை முதலை தன் வாயால் கவ்விக்கொண்டபோது உதவி கோரி கசேந்திரன் ஆதிமூலமே என்று விட்டுணுவை கதறி அழைத்ததாகப் புராணம் பேசுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---ஆதிமூலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதிமூலம்&oldid=1222759" இருந்து மீள்விக்கப்பட்டது