ஆயிற்று போயிற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆயிற்று போயிற்று

சொல் பொருள்

ஆயிற்று – செய்ய வேண்டிய செயல்கள் எல்லாமும் செய்தாயிற்று. போயிற்று – என்ன செய்தும் பயன்படாமல் உயிர் போயிற்று.

விளக்கம்

உள்ளுக்கும் வெளிக்குமாக உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையில் நாடியிருக்கிறதா? பால் இறங்கு கிறதா? ஆள் குறிப்புத் தெரிகிறதா? எனப் பலவாறாக ஆய்ந்து பார்ப்பது வழக்கம். உயிர் உள்ளேயா வெளியேயா என்பது தெரியாமல் உற்றார் உறவுகள் திகைப்புற்றுக் கொண்டிருக்கும் வேளையில் “என்ன நிலையில் இருக்கிறது?” என்பார்க்கு ‘ஆச்சு போச்சு’ என்று கிடக்கிறது என்பர். ‘எல்லாரும் சமமென்பது உறுதியாச்சு’ என்பது போல ஆச்சு போச்சு என்பவை இலக்கிய வழக்கும் பெறலாயின.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆயிற்று_போயிற்று&oldid=1913245" இலிருந்து மீள்விக்கப்பட்டது