ஆய்ந்து ஓய்ந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆய்ந்து ஓய்ந்து (ஆஞ்சு ஓஞ்சு)

சொல் பொருள்

ஆய்ந்து – ஆராய்ந்து பார்த்து ஓய்ந்து – ஒன்றும் செய்ய முடியாமல் சோர்ந்து.

விளக்கம்

இதைச் செய்வேன்; அதைச் செய்வேன் எனப்பல பல வகையாய் ஆராய்ந்து பலபல செயல்களில் ஈடுபட்டுச் செய்த ஒருவன், ஒன்றிலும் வெற்றி கொள்ள இயலாமல் ஒடுங்கிவிட்ட நிலையில் அவனை ‘ஆஞ்சு ஓஞ்சு’ அடங்கி விட்டான் என்பர். ஓய்தல் ஒன்றும் செய்யமுடியாமல் அமைந்து விடுதல்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆய்ந்து_ஓய்ந்து&oldid=1913246" இலிருந்து மீள்விக்கப்பட்டது