ஆறுதல் தேறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆறுதல் தேறுதல்

சொல் பொருள்

ஆறுதல் – மனம் ஆறுதற்குத் தக்கவற்றைக் கூறுதல். தேறுதல் – ஆறிய மனம் தெளிதற்குத் தக்கவற்றைக் கூறுதல்.

விளக்கம்

நிகழாதவை நிகழ்ந்த காலையில் ஆறுதல் தேறுதல் இன்றித் தவிப்பார் உளர். அந்நிலையில் ஆறுதல் – தேறுதலாய் அமைவார் அரியரும் அருமையருமாம் “கெட்ட காலை விட்டனர் என்னாது, நட்டோர் என்பது நாட்டினை நன்று” என்பது பெருங்கதை. இளைப்பாறுதல், களைப்பாறுதல், ஆகியவற்றினும் மன ஆறுதல் அருமையே! தேர்வுகளில் தேறுவாரும் முதன்மையில் முதன்மையாய் தேறுவாரும் மனத்தில் தேறுதல் கொண்டாராய் காணல் அருமையே!

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆறுதல்_தேறுதல்&oldid=1913244" இலிருந்து மீள்விக்கப்பட்டது