இடக்கு முடக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இடக்கு முடக்கு

சொல் பொருள்

இடக்கு – எளிமையாக இகழ்ந்து பேசுதல் முடக்கு – கடுமையாக எதிரிட்டுப் பேசுதல்

விளக்கம்

நகையாண்டியாக இருப்பவனை இடக்கன் என்பதும், வண்டியில் பூட்டப்பட்ட மாடு செல்லாமல் ‘குணங்கினால்’ இடக்குச் செய்கிறது என்பதும் வழக்கு. அவையில் சொல்லக் கூடாத சொல்லை மறைத்துச் சொல்வது இடக்கர் அடக்கு.

முடக்கு, மடக்கு என்னும் பொருளதாம். மடக்கி எதிர்த்துப் பேசுதல் மடக்கு என்றும் முடக்கு என்றும் ஆயிற்று. முடக்குதல் மேற்செல்ல விடாமலும் சொல்லவிடாமலும் தடுத்தலாம். எதிரிட்டுத் தடுத்தல் மடக்குதல் என வழங்குவதும் அறிக.

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடக்கு_முடக்கு&oldid=1913241" இலிருந்து மீள்விக்கப்பட்டது