இட்டடி முட்டடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இட்டடி முட்டடி

சொல் பொருள்

இட்டடி – இட்டு அடி, இட்டடி; கால் வைக்கும் அளவுக்கும் கூட இடைஞ்சலான இடம். முட்டடி – முட்டு அடி, முட்டடி; காலின் மேல் வைத்து முட்டுகின்ற அளவு மிக நெருக்கடியான இடம்

விளக்கம்

‘இட்டடி முட்டடியான இடம்’ என்பதில் இப்பொருள் உண்டாயினும் ‘ இட்டடி முட்டடிக்கு உதவுவான்’ என்பதில் இதன் நேர் பொருள் இல்லாமல் வழிப் பொருளே உண்டாம்.

இட்டடி என்பது, தம் கையில் எதுவும் இல்லாத நெருக்கடியையும், முட்டடி என்பது எவரிடத்துக் கேட்டும் எதுவும் பெற முடியாத முட்டுப் பாட்டையும் குறித்தனவாம். அந்நிலையிலுள்ள போதும் உதவுபவனை ‘உதவுவான்’ எனப் பாராட்டுவர். முட்டுப்பாடு இட்டடி முட்டடிக்கு-வறுமை. அது எதுவும் கிட்டுதற்கு இல்லாமல் முட்டுதல் வழியாகத் தந்தது. தட்டுப்பாடும் அது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=இட்டடி_முட்டடி&oldid=1913242" இலிருந்து மீள்விக்கப்பட்டது