இதம்பதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதம்பதம்

சொல் பொருள்

இதம் – இனிமையாகப் பேசுதல் பதம் – பக்குவமாகப் பேசுதல்

விளக்கம்

இதம் என்பது இனிமையையும் இனிய சொல்லையும் சுட்டும். இதமாகப் பேசுதல் என்பது கேட்பவர் விரும்பப் பேசுதலாம்.

பதம் என்பது பக்குவம். வேக்காட்டு நிலையைப் பார்த்தல் பதம் பார்த்தல் என்பதும், விளைவை அறுக்கும் பதமாக இருக்கிறது என்பதும் கருதுக. இனி, கடைந்து பக்குவமாகத் திரட்டப்பட்ட வெண்ணெய் பதம் எனப் படுவதையும், பதனீர் உண்மையையும் கருதுக.

புகும்வேளை சரியாக இருக்க வேண்டும் என்னும் குறிப்பில் ‘பதனன்று புக்கு’ எனவரும் புறப்பாட்டு.

"https://ta.wiktionary.org/w/index.php?title=இதம்பதம்&oldid=1913240" இலிருந்து மீள்விக்கப்பட்டது