இயற்கை எய்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இயற்கை எய்துதல்

சொல் பொருள் விளக்கம்

இயற்கை ஐவகை மூலப் பொருள்களையுடையது. அவை வெளி, வளி, தீ, நீர், மண் என்பன. இவை ஐம்பூதங்கள் எனப்படும். ஐம்பூதங்களால் அமைந்தது உலகம். அவ்வைம் பூதங்களாலும் அமைந்தவையே உலகப் பொருள்கள். அவற்றுள் ஒன்றாகிய மூச்சுக் காற்று வெளிக் காற்றொடு சேரவும். உடல் தீயுண்டோ, மண்ணுள் புதையுண்டோ மண்ணோடு மண்ணாகி விடவும் நேரும் நிலை, இயற்கையோடு இயற்கை ஒன்றிவிடுவதாக இருத்தலால் இயற்கை எய்துதல் என்பது வழக்கமாயிற்று. இயற்கை எய்துதல் என்பது இறத்தல் என்பதாம். இலக்கணர் இறத்தல் என்னாமல் இவ்வாறு கூறுதலை மங்கல வழக்கு என்பர். ‘இறத்தல்’ என்பதும் கூட மங்கல வழக்காம். இறத்தல், கடத்தல். அளவிறந்த, வரை இறந்த என்பவை அறிக.

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயற்கை_எய்துதல்&oldid=1913035" இலிருந்து மீள்விக்கப்பட்டது