இரை தண்ணீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இரை தண்ணீர்

சொல் பொருள்

இரை – தீனி வகை தண்ணீர் – குடிநீர்

விளக்கம்

உயிரிகளை வளர்ப்பார் ‘இரை தண்ணீர்’ வைத்தலில் கருத்தாக இருக்க வேண்டும். “வாயில்லா உயிர்; அது என்ன, கேட்குமா? நாம் தான் இரை தண்ணீர் பார்க்க வேண்டும்” என்று கூறும் வழக்கம் உண்டு.

இவ்வழக்கால் ஆறறிவு உயிரியாம் மாந்தரும், உண்டு நீர் பருகுவதை ‘ இரை தண்ணீர்-பார்க்க வேண்டும் என்று கூறுவதும் வழக்கமாயிற்று. கோழிக்கு இரை வைத்தல்; மாட்டுக்குத் தீனி போடல் என்பவை மரபுகள்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரை_தண்ணீர்&oldid=1913239" இலிருந்து மீள்விக்கப்பட்டது