இல்லான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

இல்லான்:
வறியவன்/ஏழை
(கோப்பு)

பொருள்[தொகு]

  • இல்லான், பெயர்ச்சொல்.
  1. வறியவன்
    (எ. கா.) இல்லானை யில்லாளும் வேண் டாள் (நல்வழி. 34)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. poor man, one in want

விளக்கம்[தொகு]

  • இல்லான் எனில், செல்வம், பணம் காசு, ஒன்றுமில்லாத ஏழை என்றுப்பொருள்...இல்லாள் எனில் மனைவி என்றுப் பொருள்...அச்சொல்லுக்கு ஆண்பால் போலத் தோன்றும் இல்லான் வேறு பொருளுடையது...இல்லாள் என்பதற்கு ஆண்பாற் சொல் இல்லாளன் ஆகும்...

இலக்கியம்[தொகு]

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல். (ஔவையாரின் நல்வழி நூல்..34)


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இல்லான்&oldid=1452934" இருந்து மீள்விக்கப்பட்டது