உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தியார்உரியார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உத்தியார் உரியார்

சொல் பொருள்

உத்தியார் – ஒத்த திறமுடைய இருவர் உத்தியார். உரியார்- இருவருள் தேர்ந்தெடுக்கப்பட்ட உரிமையுடைய ஒருவர் உரியார்.

விளக்கம்

சிறார் விளையாட்டில் ஆட்டத்திற்கு ஆள் எடுக்கும் போது கேட்கும் இணைச்சொல் இது.

ஒற்றைக்கு ஒற்றையை ‘உத்திக்கு உத்தி’ என்பர்; ஒத்தவன் ஒத்தியாகி ‘உத்தி’யானான். ஓத்தைக்கு ஒத்தை என்பதும் உண்டு.

“மணலைக் கயிறாகத் திரித்தவன் வேண்டுமா? வானத்தை வில்லாக வளைத்தவன் வேண்டுமா?” என்று தலைமை ஆட்டக்காரனிடம் உத்தியாக வந்தவர் கேட்பார். அவன் எவனென்று சொல்கிறானோ அவன் தங்களுக்கு முன்னே பேசி வைத்துக் கொண்ட பெயர்ப்படி உத்தியாகப் போவான்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=உத்தியார்உரியார்&oldid=1913236" இலிருந்து மீள்விக்கப்பட்டது