உள்ளது உரியது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உள்ளது உரியது

சொல் பொருள்

உள்ளது – கையில் உள்ள பொருள்; தங்கம் , வெள்ளி, பணம் முதலியன. உரியது – மனை, நிலம் முதலிய உரிமைப் பொருள். வழிவழியுரிமையாகவோ விலைமானம் தந்து வாங்குதல்

விளக்கம்

உரிமையாகவோ வந்த பொருள்.

உள்ளது உரியதை விற்றாவது செய்ய வேண்டியதைச் செய்து தானே தீர வேண்டும். என்பது இதெனினும் உச்சமானது ‘வில்லாததை விற்றாவது கொடு’ என்பது. “வில்லாதது” என்பது தாலி! விற்காததை வில்லாததை என ஆயிற்று.

மனை, நிலம் முதலியன விற்பார் வாங்குவார்க்கு, “இதனை வழி வழியாய் ஆண்டு அனுபவித்துக் கொள்வீர்களாகவும்” என உரிமைப் படுத்தும் உறுதிமொழி எழுத்து வழியாகத் தருதல் அதன் உரிமையைத் தெளிவாக்கும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=உள்ளது_உரியது&oldid=1913233" இலிருந்து மீள்விக்கப்பட்டது