ஊரணியும் ஊருணியும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஊரணியும் ஊருணியும்

சொல் பொருள்

ஊரணி – ஊருக்கு அணித்தாக அமைந்த நீர்நிலை. ஊருணி – ஊரவர்க்குக் குடிநீராக அமைந்த நீர் நிலை.

விளக்கம்

ஊர்+அணி-ஊரணி; ஊர்-உணி-ஊருணி.

ஊர்க்கு அணித்தே அமைந்த நீர்நிலை. குளிக்கவும் துணி தோய்க்கவும் கலம் முதலியன கழுவவும் பயன்படுத்தப்படும். ஊர்க்கு அப்பால் குடிநீர்க்கென்றே அமைந்தது ஊருணியாம். ஊருணியும் ஊரணியும் சங்கநூல்களிலேயே இடம் பெற்றுள.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊரணியும்_ஊருணியும்&oldid=1913230" இலிருந்து மீள்விக்கப்பட்டது