எச்சிற்கை ஈரக்கை
Appearance
எச்சிற்கை ஈரக்கை
சொல் பொருள்
எச்சிற்கை – உண்டபின், கழுவாத கை. ஈரக்கை – உண்டு கழுவியபின், ஈரத்தைத் துடையாத அல்லது உலராத கை.
விளக்கம்
‘எச்சிற்கையோ ஈரக்கையோ உதறமாட்டான். எனக் கருமிகளைப் பழித்துரைப்பர். எச்சிற்கையை உதறினால், அதில் ஒட்டியுள்ள ஒன்றிரண்டு பொறுக்குகள் உதிர்ந்துபோம் என்றும், ஈரக்கையை உதறினால் அதில் படிந்துள்ள நீர்த்துளி வீழ்ந்துவிடும் என்றும் எண்ணிக் கையை உதறமாட்டானாம்! இத்தகையவனை ‘எருமைத் தோலைக் கொண்டு வடிகட்டினால் ஏதாவது வழியுமா? நெய்யரி, சல்லடை, பன்னாடையைக் கொண்டு வடிக்கட்டினால் வழியும், எருமைத் தோலைக் கொண்டு வடி கட்டினால்?