உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டேகால் லட்சணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஔவையார்-'எட்டேகால் லட்சணமே' என்றச் சொல்லை உண்டாக்கி பயன்படுத்தினார்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

எட்டேகால் லட்சணம், .

பொருள்

[தொகு]
  1. அழகற்றவர், குரூபி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. an ugly person.

விளக்கம்

[தொகு]
  • ஒருவர் அழகற்றவர் என்பதை நாசூக்காகக் குறிப்பிடும் சொல். தமிழில் எண்களை எழுதும்போது எட்டு என்பதை 'அ' என்றும் கால் என்பதை 'வ' என்றும் எழுதுவார்கள். ஆக எட்டேகால் என்றால் அவ என்றாகிறது. இதோடு லட்சணம் என்ற சொல்லைச் சேர்த்தால் அவலட்சணம் ஆகும். அதாவது லட்சணமற்றவர் (அழகற்றவர்) என்று பொருள்....ஔவையார் இந்தச் சொற்றொடரை தன் பாடலில் அறிமுகப்படுத்தினார். 'ஒரு காலடி நாலிலைப் பந்தலடி' என்று விடுகதை விடுத்து தன்னை அவமதித்த கம்பரைக் குறிவைத்து பதிலுக்கு தாம் இயற்றிய கவிதையில் இச்சொற்றொடரைப் பயன்படுத்தினார்...

(இலக்கியப் பயன்பாடு)

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது---ஔவையார்

"https://ta.wiktionary.org/w/index.php?title=எட்டேகால்_லட்சணம்&oldid=1225105" இலிருந்து மீள்விக்கப்பட்டது