எதிரும் புதிரும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எதிரும் புதிரும்

சொல் பொருள்

எதிர் – எதிர்த் திசை புதிர் – எதிர்த்திசைக்கு எதிர்த் திசை.

விளக்கம்

இருவர் எதிரிட்டுப் போதலையும், பேசுதலையும், இருத்தலையும் முறையே எதிரும் புதிருமாகப் போகின்றனர், எதிரும் புதிருமாகப் பேசுகின்றனர், எதிரும் புதிருமாகவே இருக்கின்றனர் என்பர்.

புதிர் என்பது எதிர்க்கு எதிராயது.

விடுகதையைப் ‘புதிர்’ என்பது வழக்கு. புதிர் போடுதல் என்பதும் உண்டு. தொல்காப்பியர் நாளில் ‘பிசி’ எனப்பட்டதே பின்னர் புதிர் என்பதாகவும் விடுகதையாகவும் வழங்கப்படுகின்றதாம். விடுகதை மாறி மாறிக் கேட்டு விடுவிக்கப் பெறுவது என்பது அறிந்தால் புதிரின் பொருள் புலனாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=எதிரும்_புதிரும்&oldid=1913226" இலிருந்து மீள்விக்கப்பட்டது