எதுகை மோனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எதுகை மோனை

சொல் பொருள்

எதுகை – இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை. மோனை – முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.

விளக்கம்

எதுகை மோனை இல்லாத ‘பா’ பாவன்று, பாவின் அழகு எதுகை மோனைகளில் தொக்கிக் கிடத்தல் கண்கூடு. எதுகை மோனை, அறியார் வாக்கில் ‘எகனை மொகனை’ என வழங்கப்படுகின்றது.

செய்யுள்களுக்கு உரிய எதுகை மோனை பழமொழிகளிலும் பயில வழங்கும்.

“ஆடிப்பட்டம் தேடி விதை,” “சித்திரை மாதப் புழுதிபத்தரை மாற்றுத்தங்கம்”- இவை எதுகை.

“தைப்பனி தரையைப் பிளக்கும்”-இவை மோனை.

"https://ta.wiktionary.org/w/index.php?title=எதுகை_மோனை&oldid=1913225" இலிருந்து மீள்விக்கப்பட்டது