எருக்கம்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
எருக்கம்பூ
எருக்கம்பூ

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

எருக்கம்பூ பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. எருக்கின் மலர்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. flower of a herbal plant--Calotropis Gigenta

விளக்கம்[தொகு]

  • இந்த மலர்களை முறைப்படி உபயோகிக்க முறைசுரம், நீங்காத நீர்ப்பீநசம், சுவாசகாசம்,கழுத்து நரம்பின் இசிவு ஆகிய உபத்திரவங்கள் போகும்...வினாயக பெருமானின் பூசைக்குரிய மலர்களில் ஒன்று...
  1. மருத்துவப்பயன்: எருக்கம்பூவிற்கு சமனெடை மிளகு வைத்து மைய அரைத்து இரண்டு குன்றிமணி அளவு மத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்...தினம் இரண்டு வேளை ஒவ்வொரு மாத்திரை வீதம் கொடுத்துவர முறைசுரம் போம்.
  2. ஐந்து பலம் பசுநெய்யில் 10-12 எருக்கம் பூக்களைப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 1/2--1 தோலா வீதம் கொடுக்கச் சுவாசகாசம் , நீர்ப்பீநசம் போகும்...
  3. இந்தப் பூக்களை உலர்த்தி சூரணம் செய்து வேளைக்கு 1/2--1 குன்றிமணி எடை சர்க்கரையுடன் கூட்டி சில நாட்கள் கொடுத்தால் ஆரம்பநிலையிலுள்ள குட்டம், மேகரணம், வெள்ளை ஆகியவை போகும்...இதை உண்ணும் காலத்தில் பசும்பாலைத் தவிர வேறோன்றையும் உண்ணக்கூடாது.
  4. ஐந்து பலம் நல்லெண்ணெயில் ஒன்றரைப் பலம் எருக்கம்பூக்களைப் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடித்து குளித்துவந்தால் புறங்கழுத்தின் வலி போகும்.


( மொழிகள் )

சான்றுகள் ---எருக்கம்பூ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எருக்கம்பூ&oldid=1218992" இலிருந்து மீள்விக்கப்பட்டது