ஏங்கல் தாங்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஏங்கல் தாங்கல்

சொல் பொருள்

ஏங்கல் – ஏங்கத் தக்க வறுமையும் துயரும் கூடியநிலை. தாங்கல் – ஏங்கத் தக்க நிலையில் தாங்கியுதவும் நிலை.

விளக்கம்

“உனக்கு என்ன! ஏங்கல் தாங்கலுக்கு ஆள் இருக்கிறார்கள்” என்பது வழக்கு. ஏங்கல் தன்னிலையில் தாழ்வு; தாங்கல் பிறர் முட்டுப்பாட்டுக்குத் தாங்கியாக வேண்டிய இக்கட்டு. இவ்விரு நிலைக்கும் உதவியாக இருப்பவன் ஏங்கல் தாங்கலுக்கு உதவுபவனாம். ஏங்கலுக்கு உதவுவாரும் தாங்கலுக்கு உதவுதல் அரிது. ஆகலின் அவ்வருமை கருதியே ஏங்கல் தாங்கலுக்கு உதவுவான் என்று சிறப்பிப்பர். தாங்குதல் என்பது வீழ்வாரை எடுத்து நிமிர்த்துதலாம். சுமைதாங்கி, குடிதாங்கி, அறந்தாங்கி என்பவற்றை எண்ணுக. ‘மண்தாங்கி’ எனக் கூரைவீட்டு அட்டளைக் கம்பு உள்ளதையும் அறிக.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏங்கல்_தாங்கல்&oldid=1913223" இலிருந்து மீள்விக்கப்பட்டது