உள்ளடக்கத்துக்குச் செல்

ஏச்சுப் பேச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஏச்சுப் பேச்சு

சொல் பொருள்

ஏச்சு – பழித்தல். பேச்சு – திட்டுதல்

ஏசுதல் – ஏச்சு; பேசுதல்-பேச்சு;

விளக்கம்

‘ஏசி இடலின் இடாமை நன்று’ என்றார் ஒளவையார். ஈவான் இகழாமை வேண்டும் என்பது வள்ளுவம். இகழ்தல் வேறு; திட்டுதல் வேறு. முன்னது குறை கூறல்; பின்னது வசை கூறல்.

வசைச் சொல்லைத் தொல்காப்பியர் ‘வை இயமொழி’ என்பார். ‘இசை வசை’ என்னும் முரண் எவரும் அறிந்ததே.

பேச்சு, பொதுமைக் குறிப்பில் இருந்து நீங்கி வசைப் பேச்சை இவண் சுட்டியது. ‘பேச்சு’ என்பது திட்டுதல் பொருளில் இதுகால் மிகுதியாக வழங்குகின்றது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏச்சுப்_பேச்சு&oldid=1913222" இலிருந்து மீள்விக்கப்பட்டது