ஏனோ தானோ
Appearance
சொல் பொருள்
ஏனோ – என்னுடையதோ தானோ – தன்னுடையதோ; அதாவது அவனுடையதோ.
விளக்கம்
ஒரு செயலைச் செய்வான் தன்னுடையது எனின் மிகமிக அக்கறையுடனும் ஆர்வத்துடனும் செய்வான். அத்தகையவன் பிறனுடையதெனின் ஆர்வமும் கொள்ளான், அக்கறையும் காட்டான். இவனோ என்னுடையது என்று அக்கறைக்காட்டிச் செய்வானும் அல்லன்; அவனுடையது என்று அறவே புறக்கணிப்பானும் அல்லன். இரண்டும் கெட்டனாய்ப் பட்டும் படாமல்’ செய்கிறான் என்பதாம்.
என் என்பது ‘ஏன்’ என நீண்டது. ‘ஏன் பொருள்’ ஏன் எண்ணம்’ என நீள்வதுபேச்சு வழக்கில் உள்ளனவே. தான் என்பது படர்க்கைப் பெயர்.