ஏரும் கலப்பையும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஏரும் கலப்பையும்

சொல் பொருள்

ஏர் – ஏர்த் தொழில் கலப்பை – ஏர்த் தொழிலுக்குரிய கருவியாம் கலப்பை.

விளக்கம்

வேளாண் தொழிலில் பலப்பல வேலைப் பிரிவுகள் இருப்பினும் உழவுத் தொழில் எனவும், உழவர் எனவும் பெயர் வழங்கும் வழக்கம், உழவை விளக்கும். திருவள்ளுவர் கூறியது ‘உழவு’ என்பதே.

மேல்மண் கீழ்மண் கலக்க வைக்கும் கருவி கலப்பையாம். கலப்பைக்கும் ஏர் எனப் பெயர் உண்டு. ‘ஏர்க்கால்’ என்பது குத்தியில் நுழைக்கப் பெற்று நீண்டு நுகக் கோலுக்குச் செல்லும் தடியாம். ஏர் என்பது உழுதல் தொழிலில் வருவதை “ஏரினும் நன்றா எருவிடுதல்” என்னும் குறள் தெளிவிக்கும். (குறள் 1038)

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏரும்_கலப்பையும்&oldid=1913216" இலிருந்து மீள்விக்கப்பட்டது