ஏழை எளியவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஏழை எளியவர்

சொல் பொருள்

ஏழையர் – ஏழ்மைக்கு ஆட்பட்டவர். எளியவர் – பிறரால் எளிமையாக எண்ணப்பட்டவர்.

விளக்கம்

ஏழை எளியவர் பிறரால் போற்றப்பட வேண்டியவர். ஆனால் அப்பிறரோ ஏழை எளியவரை மேலும் ஏழைமைக்கும், எளிமைக்கும் ஆட்படுத்துபவராக ஆகி விடக்கூடாது. உயர்த்தக் கடமைப்பட்டவர் அதனைச் செய்யாததுடன் தாழ்த்தவும் முனைதல் பெருந்தவறாம். ஏழைமையும், எளிமையுள் ஒன்று. ஆனால் எளிமைப்படுபவர் உளர். ‘எளிதென இல்லிறப்பான்’ என்னும் வள்ளுவம் எளிமையை விளக்கும். (குறள் 145)

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏழை_எளியவர்&oldid=1913215" இலிருந்து மீள்விக்கப்பட்டது