ஏவரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பலுக்கல்
பிளிசு இலியாவிட்(Bliss–Leavitt) மார்க்- 8 ஏவரி

பொருள்[தொகு]

 • ஏவரி, பெயர்ச்சொல்.

1. படைத்துறை: இது ஒரு பெரிய சுருட்டு வடிவ தானுந்தி நீரடி ஏவுகணை ஆகும். இது கப்பல் அல்லது நீர்மூழ்கியிலிருந்து இருந்து ஏவப்பட்டோ அல்லது ஒரு வானூர்தியிலிருந்து நீரினுள் இறக்கிவிடப்பட்டாலோ, இலக்கை எட்டும்போது மோதி வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. பெற்றோலிய தொழிற்சாலை: எண்ணெய் கிணறுகளில் தடைகளை அழிக்க தாட்டப்படும் ஓர் பொருள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 • ஆங்கில உச்சரிப்பு - torpedo


வினைச்சொல்[தொகு]

 1. ஏவரியை (படைத்துறை) இலக்கு நோக்கி ஏவவும்
 2. ஏவரியை (பெற்றோலியம்) கிணற்றிற்குள் இறக்கு


விளக்கம்[தொகு]

   = ஏவு,கணை
 அரி = நீர், அழித்தல்,படைக்கலம்
 ஏ + அரி = ஏவரி --> நீரினில் ஏவப்படும் ஏவுகணை.

பயன்பாடு[தொகு]

 • செருமானிய 'யூ' நீர்மூழ்கிகள் பிரித்தானிய கப்பல்கள் மீது ஏவரிகளை ஏவின

உசாத்துணை[தொகு]

 • புத்தம் புதிய சொல்லாக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏவரி&oldid=1914387" இருந்து மீள்விக்கப்பட்டது