உள்ளடக்கத்துக்குச் செல்

ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கடவுளின் ஐந்தொழிலாக கருதப்படுவன

  1. சிருஷ்டி - கடவுள் உயிர்களுக்காக மாயா கருவிகளை படைத்தும் அறிவு விளக்கம் தரும் செயல்
  2. திதி - மாயா காரியங்களை நிறுத்தி அறிவை நிலைத்த பொருளென உணர்த்தும் செயல்
  3. சங்காரம் - மாயா கருவிகளை ஒடுக்கி அறிவை போக்கும் செயல்
  4. திரோபவம் - உயிர் தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைக்கும் செயல்
  5. அருள் (அ) அனுக்கிரகம் - உயிர்களுக்கு இன்ப துன்பங்களை புசிப்பித்து வினைகளை அறுக்கும் செயல்

சிவ பெருமான் பஞ்ச பூதங்களாலான இப்பிரபஞ்சத்தை பஞ்ச தலங்களில் அமர்ந்து முறையே படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐந்தொழிலை புரிகிறார் என்றும் கூறுவர்.