ஒட்டியும் வெட்டியும்
Appearance
ஒட்டியும் வெட்டியும்
சொல் பொருள்
ஒட்டி – ஓராற்றான் இயைந்து கூறுதல் வெட்டி – நேர்மாறாக மறுத்து கூறுதல்.
விளக்கம்
“ஒட்டிப் பாடவோ? வெட்டிப் பாடவோ?” என்பது புகழேந்தியார் வினா. ஒட்டக் கூத்தர் அரசவைப் புலவர்; ஆதலால் அவர்க்கு இறக்கம் வாராதிருக்க இரக்கம் கொண்ட சோழன் ‘ஒட்டிப் பாடுக’ என்றது புலவர் புனைவுச் செய்தி. ஒட்டுதலும், வெட்டுதலும் எதிரிடை என்பது வெளிப்படை தானே.