ஒன்றுக்குள்ளே ஒன்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒன்றுக்குள்ளே ஒன்று

சொல் பொருள்

ஒன்று – ஒரு பெரும் பிரிவு உள்ளே ஒன்று – பெரும் பிரிவினுள் ஒருசிறு பிரிவு

விளக்கம்

ஓரினத்திற்குள்ளோ, ஒரு குடிவழியினுள்ளோ பகை, பிளவு, உரசல் முரசல், ஏற்பட்டால், “ஒண்ணுக்குள்ளே ஒண்ணு; பொறுத்துப் போக வேண்டாமா?” என்பர். ‘அவன் யார்? நீயார்?’ என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா?” என்றும் கூறுவர். இனத்துள் அல்லது குடும்பத்துள் பிளவு கூடாது என்னும் பெருநோக்கில் எழுந்தது இது.

நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் பகைத்து நிற்கக் கண்ட பண்டைப் புலவர் “நீயும் சோழன் அவனும் சோழன்; இப்படியா பகைத்து நிற்பது?” என்று கேட்கவில்லையா? அக் கேள்விக்குள்ளே இருப்பது ‘ஒன்றுக்குள்ளே ஒன்று’ என்பதே.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒன்றுக்குள்ளே_ஒன்று&oldid=1913219" இலிருந்து மீள்விக்கப்பட்டது