ஓரங்கட்டு
Appearance
தமிழ்
[தொகு]ஓரங்கட்டு வினைச்சொல் .
பொருள்
[தொகு]- ஒதுக்கு
- வேற்றுமை பாராட்டு
- அலட்சியப்படுத்து
- உதாசீனப்படுத்து
- பொருட்படுத்தாமலிரு
- புறக்கணி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- neglect
- ignore
- discriminate
- set aside
- overlook
விளக்கம்
[தொகு]- பேச்சுமொழி...முக்கியத்துவம் கொடுக்காமலும் ஒரு நபர் அல்லது விடயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலும் பிறகு பார்த்துக் கொள்ளலாமென்றோ அல்லது தேவையில்லை என்றோ ஒரு மூலையில்(ஓரம்) வைத்துவிடும்/போட்டுவிடும் செய்கையே 'ஓரம்கட்டுதல்' ஆகும்.
பயன்பாடு
[தொகு]- முனுசாமியோடு யாரும் பேசுவதில்லை. எல்லாரும் அவனை ஓரங்கட்டி விட்டார்கள்.
- இந்த செலவெல்லாம் இப்போது தேவையில்லை. ஓரங்கட்டிவிடு. பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
- இப்படி அனைவரும் என்னை ஓரங்கட்டிவிட்டால் நான் எங்கு போவேன்?