ஓரிதழ்த்தாமரை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- viola suffruticosa (தாவரவியல் பெயர்)//
- Hybanthus Enneaspermus(தாவரவியல் பெயர்)
பொருள்
[தொகு]ஓரிதழ்த்தாமரை, .
- ஒரு சிறிய பூண்டின மூலிகைச் செடி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- Spade Flower plant, a herbal plant
விளக்கம்
[தொகு]- இது சிறிய பூண்டினத்தைச் சேர்ந்த மூலிகை...இதன் பூவில் ஒரேஒரு இதழ்தான் இருக்கும்...பார்வைக்குச் செந்தாமரைப்பூவின் நிறத்தை ஒத்திருப்பதால் ஓரிதழ்த்தாமரை எனப்படுகிறது...இந்த மூலிகை சுக்கிலத்தையும், எழிலையும் உண்டாக்கும்...மேக வியாதிகளையும், கிரகணியையும் போக்கும்...
- இதை அரைத்துத் தினமும் நெல்லிக்காய் அளவு பாலில் கலக்கிப் பருகத் தாது விருத்தியாகும் மற்றும் வெள்ளை, வெட்டை, நீர்ச்சுருக்கு, எரிச்சல் ஆகிய மேகசம்பந்தமான நோய்கள் போகும்...மோரில் கலக்கிக் குடித்தால் கிராணி முதலிய பேதிகள் நிற்கும்...தாது விருத்திக்கான லேகியமான புருஷ ரத்தின லேகியத்தில் சேர்க்கப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஓரிதழ்த்தாமரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி