கசண்டி
Appearance
கசண்டி
சொல் பொருள் விளக்கம்
முடி முழுவதாக இல்லாத வழுக்கைத் தலையைக் கசண்டி என்பது நாஞ்சில் நாட்டு வழக்காகும். கசகசக்கும் வியர்வையற்றது என்னும் பொருளில் வந்திருக்கலாம். வழு வழு என்று இருப்பதால் தலை வழுக்கைக்கும் தேங்காய் வழுக்கைக்கும் பெயராயிற்று. வழுவழுப்பு வழியாகப் பெற்ற பெயரே வாழை என்பது.