கணக்கு வழக்கு
Appearance
கணக்கு வழக்கு
சொல் பொருள்
கணக்கு – கணக்கிட்டுத் தந்தது. வழக்கு – செய்முறைகளால் தந்தது.
விளக்கம்
“எனக்கும் அவனுக்கும் கணக்கு வழக்கு ஒன்றும் இல்லை” என நட்பில் கூறுவதும் “கணக்கு வழக்கைப் பார்த்து கொடுத்துவிடு” எனப் பகையில் கூறுவதும் கேட்கக் கூடியவை.
வழக்கு-வழக்கம், நடைமுறை, மொய், நன்கொடை அன்பளிப்பு எனத் தந்தவையும் வழக்கில் வந்து விடும். தின்றதைக் கக்கு’ என்பது சிறுபிள்ளைத்தனம் என்றால் பெரியவர்களிலும் அத்தகையர் உண்டு.