கயாசிராத்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கயாசிராத்தம், பெயர்ச்சொல்.
- (கயா+சிராத்தம்)
- ஓர் ஈமச் சடங்கு
- கயையிற்செய்யும் முன்னோர்களுக்கானச் சடங்கு
- இறந்தோருக்கு உணவு படைக்கும் இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள கயா என்னும் நகரில் செய்யப்படும் சடங்கு...பிற இடங்களில் முன்னோர் மரணித்த மாதம், திதி ஆகியவற்றில்தான் சிராத்தம் செய்யவேண்டும்...ஆனால் கயையில் வருடத்தின் எல்லா நாட்களிலும் செய்யலாம்...ஒரு முறை கயாசிராத்தம் செய்துவிட்டால் மிகச்சிறப்பான விடயமாகக் கருதப்படுகிறது...நோய், ஆரோக்கியம் அல்லது பிற தவிர்க்க முடியாத பிரச்சினைகளால், உண்மையாகவே, ஆண்டுதோறும் அல்லது ஒரு முறை சிராத்தம்/திவசம் செய்யமுடியாமல் போனாலும் கயாசிராத்தம் செய்தோருக்கு அந்தக்கடமையிலிருந்து விதிவிலக்கு உண்டு....கவனம்:நன்றாக இருக்கும்போதும்,இந்த விதிவிலைக்கை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு வருடந்தோறும் செய்யும் திவசத்தைச் செய்யாமல் விடுபடமுடியாது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Religious ceremony for the departed, performed at Gaya.
- Ceremonies for the dead performed at Gaya.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +