கரிஊளைக்குரங்கு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கரிஊளைக்குரங்கு,
பொருள்
[தொகு]- ஊளையிடும் குரங்கினம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- Black howler(monkeys)
விளக்கம்
[தொகு]- இவ்வகை குரங்குகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் அர்ஜன்டைனா, பொலிவியா, பிரேஃஜில் மற்றும் பராகுவே நாட்டுக் காடுகளில் வாழ்கின்றன... அழிந்துவரும் விலங்கினம்... இந்த இனத்தின் ஏழுவகைகளில் ஒன்று முற்றிலும் அழிந்து விட ஐந்து வகைகள் அழியும் தறுவாயில் இருக்கின்றன... மீதிஉள்ள ஓரினம்தான் நிறையக் காணப்படுகிறது... ஆண் குரங்குகள்தான் கருமையாக இருக்கும்... பெண் குரங்குகளும், இளம் ஆண் பெண் குட்டிகளும் மாறுபட்ட நிறங்களில் காணப்படும்... ஆனாலும் ஆண் குரங்குகளிலும் சில வேளை நிறம் வேறுபடும்... பழுப்பு நிற ஊளைக்குரங்குகளும் உண்டு...மிக சோம்பேறித்தனமான இனம்... ஒருநாளில் பெரும்பகுதி தூங்கிக்கொண்டும்,சும்மா உட்கார்ந்துக்கொண்டும் பொழுதைக் கழிக்கும்... இலைகளையும் சில சமயம் பழங்களையும் உண்டு வாழும்...பொதுவாக ஓட, தாவ விரும்பாமல் நடக்கவும், மரம் ஏறவுமே விரும்பும் இவை இருபது வருட காலம் உயிர் வாழும்...வாழ்வது மரங்களில்தான்... நீர் குடிக்க மட்டுமே மரத்தை விட்டு இறங்கும் ...அது கூட வறட்சிக் காலத்தில்தான்!!! மற்ற காலங்களில் ஈரமான இலைகளைத்தடவி பின்னர் கைகளை நக்கிக்கொள்ளும்...அவ்வளவு சோம்பேறித்தனம்.. இவை குழுக்களாக வசிக்கும்...தினமும் அதிகாலை தங்கள் வாழ்நிலைகளை உறுதி செய்துக்கொள்ள ஊளைக்கு ஒப்பான பெரும் ஒலி எழுப்புவதால் கரிஊளைக்குரங்குகள் என்றுப்பெயர்.