உள்ளடக்கத்துக்குச் செல்

களாக்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
களாக்காய்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

களாக்காய், .

பொருள்

[தொகு]
  1. ஒரு காய் வகை
  2. ஒரு நகைவகை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. karonda—unriped fruits.
  2. a circular piece of gold or silver in the shape of a karonda fruit attached to the necklace or mangalyam worn by women

விளக்கம்

[தொகு]
  • உணவு

இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுள்ள சிறியவகைக் காய்கள்...பச்சை நிறம் கொண்டு ஆங்காங்கே சிவப்பு நிறமும் கொண்டிருக்கும்...பெரும்பாலும் தொக்கு செய்துத் தனியாக அன்னத்துடன் பிசைந்து உண்பர்...அல்லது எலுமிச்சை ஊறுகாயோடு சேர்த்து நன்றாக ஊறியபின் சாதத்தோடுப் பிசைந்தும் பயன்படுத்துவர்...

  • மருத்துவ குணங்கள்
  1. களாக்காயால் காதடைப்பு, தாகம், பித்ததோசம், வமனம், அருசி, இரத்தபித்தம் இவை போகும்... மிகுந்த பசியை உண்டாக்கும்...
  2. இக்காய்களை நன்றாகக்கழுவி துண்டுகளாக அரிந்து உப்பிட்டுக் குலுக்கி சிறிது சாப்பிட்டால் பித்தம் நீங்கும்...
  • அணிகலன்
  1. களாக்காயின் உருவத்தில் தங்கம் அல்லது வெள்ளியில் வட்டவடிவமாக பல உருக்களைச் செய்து அவைகளை கழுத்திலணியும் மாலையில் இணைத்து உருவாக்கப்படும் ஒரு கழுத்தணி வகை...தாலியிலும் இணைத்துக்கொள்ளுவார்கள்..


( மொழிகள் )

சான்றுகள் ---களாக்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=களாக்காய்&oldid=1831302" இலிருந்து மீள்விக்கப்பட்டது