கானனீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கானனீர்
கானனீர்
கானனீர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கானனீர், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சாயாநீர்
  2. கானல்நீர்
  3. கோடையில் தெரியும்பொய் நீர்த்தோற்றம்.


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. mirage- as mistaken for a sheet of water

விளக்கம்[தொகு]

  • இயற்கையாக ஏற்படும் ஒளியின் இயல்பு...கடும் வெய்யில் காலங்களில் ஏற்படுகிறது...ஒளிக் கிரணங்கள் வளைந்து பயணிப்பதால் தூரத்திலுள்ள பொருட்கள் தெளிவாக, நிலையாகத் தெரியாமல் அசைவது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது...பாலைவனங்களில் தூரத்திலிருந்து பார்த்தால் தண்ணீர் இருப்பதைப்போல் தோன்றும்...இது ஒரு மாயத் தோற்றமே!...அவ்வாறே கடும் கோடையில் தார்ச் சாலைகளில் சற்று தூரத்தில் நீர் இருப்பதைப்போல மாயத் தோற்றம் உண்டாகும்...கானல் என்றால் வேனிற்காலம் (கோடைக்காலம்)...இக்காலத்தில் தோன்றும் பொய்யான நீர் ஆனதால் கானனீர் எனப்பட்டது...


பயன்பாடு[தொகு]

  1. இந்த ஆண்டு கத்தரி வெய்யில் கடுமையாக இருக்குமாம்...சாலைகளில் நாம் நிறைய கானனீர் காணலாம்!


( மொழிகள் )

ஆதாரங்கள் ---கானனீர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=கானனீர்&oldid=1217533" இருந்து மீள்விக்கப்பட்டது