கானல்நீர்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கானல்நீர், .
பொருள்
[தொகு]- சாயாநீர்
- கானனீர்
- கோடையில் தெரியும்பொய் நீர்த்தோற்றம்.
- இல்லாத/பொய்யான நம்பிக்கை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- mirage- as mistaken for a sheet of water
- false hope
விளக்கம்
[தொகு]- இயற்கையாக ஏற்படும் ஒளியின் இயல்பு...கடும் வெய்யில் காலங்களில் ஏற்படுகிறது...ஒளிக் கிரணங்கள் வளைந்து பயணிப்பதால் தூரத்திலுள்ள பொருட்கள் தெளிவாக, நிலையாகத் தெரியாமல் அசைவது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது...பாலைவனங்களில் தூரத்திலிருந்து பார்த்தால் தண்ணீர் இருப்பதைப்போல் தோன்றும்...இது ஒரு மாயத் தோற்றமே!...அவ்வாறே கடும் கோடையில் தார்ச் சாலைகளில் சற்று தூரத்தில் நீர் இருப்பதைப்போல மாயத் தோற்றம் உண்டாகும்...கானல் என்றால் வேனிற்காலம் (கோடைக்காலம்)...இக்காலத்தில் தோன்றும் பொய்யான நீர் ஆனதால் கானல்நீர் எனப்பட்டது...
- நடைமுறைப் பேச்சில் கானல்நீர் என்னும் சொல் பொய்யான நம்பிக்கை அல்லது நிறைவேற்ற முடியாத செயல் என்னும் பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது...
பயன்பாடு
[தொகு]- இந்த ஆண்டு கத்தரி வெய்யில் கடுமையாக இருக்குமாம்...சாலைகளில் நாம் நிறைய கானல்நீர் காணலாம்!
- கேசவன் ஏதோ நம்பிக்கொண்டிருக்கிறான்...செல்வந்தரான அவனுடைய மாமா கடைசி காலத்தில் இவனுக்கு நிறையப் பணம் காசு தருவார் என்று...அவரைப்பற்றி எனக்கு நன்றாகத்தெரியும்...இவனுடைய நம்பிக்கை எல்லாம் வெறும் கானல்நீர்தான்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கானல்நீர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி