காயலாங்கடை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
காயலாங்கடை, .
பொருள்
[தொகு]- பயனற்ற பொருட்களை வாங்கி, சேர்த்து விற்கும் கடை.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a shop that collects and sells scrap/trash materials.
விளக்கம்
[தொகு]- சென்னை வட்டார மொழி...தெருத் தெருவாகச் சுற்றி சேகரிக்கப்படும் உபயோகமற்ற,வீணான,பழுதடைந்த,உடைந்துபோன பொருட்கள், படித்து முடித்த செய்தி தாள்கள், பத்திரிகைகள் ஆகிய கழிவுப்பொருட்கள் கடைசியின் சேரும் கடை...இங்கிருந்துதான் இந்த பொருட்களிலிருந்து புதிய பொருட்களை உருவாக்கவோ, பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்தவோ அல்லது சிறு மாற்றங்கள் செய்து மறுபடியும் விற்றுவிடவோ மற்றவர்கள் வாங்கிச்செல்வர்.
- தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மக்கள் தமிழகத்தின் பல இடங்களிலும் பழைய இரும்பு கடைகளை நடத்தி வந்ததால் அவ்வகை கடைகளுக்கு காயலான் (காயல்பட்டினத்தான்) கடை எனும் பெயர் உருவானது
பயன்பாடு
[தொகு]- வீட்டில் இத்தனை சாமான்களைப் போட்டு அடைத்து வைத்திருக்கிறாயே. எதாவது உபயோகப்படுமா? பேசாமல் காயலாங்கடைக்கு போட்டுவிடு! நாலு காசாவது கிடைக்கும்!