கால்கட்டை போடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கால்கட்டை போடுதல்

சொல் பொருள் விளக்கம்

பள்ளிக்கு வராமல் தப்பியோடும் மாணவர்களுக்கு முன்பு கட்டைபோடும் வழக்கம் இருந்தது. குட்டை போடும் வழக்கமும் இருந்தது. கட்டை என்பது ஒரு சங்கிலி வளையத்தில் மாட்டப்பட்ட கட்டை, சங்கிலி காலில் மாட்டப்பட, கட்டையைத் தூக்கிக் கொண்டு நடக்கவேண்டியது. குட்டை என்பது இருகால்களையும் உள்ளடக்கி உட்கார்ந்து கால் நீட்டிய நிலையிலே வைக்கும் துளைக் கட்டையாகும். ஓடும் மாடுகளுக்குத் தொங்குகட்டை கழுத்தில் கட்டிவிடுவது இன்றும் வழக்கமே. இவ்வழக்கத்தில் இருந்து கட்டைபோடுதல் என்பது வந்ததாகலாம். கட்டை போட்டால் நினைத்தபடி திரியவோ ஓடவோ முடியாது. அதுபோல் திருமணம் செய்து விட்டால், கட்டின்றிக் திரிந்த காளைபோல்வான் கட்டுக்குள் அமைவான் என்னும் கருத்தில் திருமணத்தைக் கால் கட்டை போடுதல் என்பது வழக்கமாயிற்று. தளைபோடுதல் என்பதும் அது

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்கட்டை_போடுதல்&oldid=1913032" இலிருந்து மீள்விக்கப்பட்டது