கிண்டிக்கிளறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கிண்டிக்கிளறுதல்

சொல் பொருள் விளக்கம்

கோழி தீனியைத் தின்னுதற்குக் கிண்டும் கிளறும். பளிக்குத்தளமாக இருந்தாலும் கிண்டிக் கிளறலைக் கோழிவிடுவது இல்லை. “பழக்கம் கொடிது பாறையினும் கோழிகிண்டும்” என்பது பழமொழி. சிலரிடம் சில செய்திகளை வாங்குவதற்காகக் கிண்டிக் கிளறுவது உண்டு. சினமூட்டியும். சிறுமைப்படுத்தியும், துன்புறுத்தியும் செய்திகளைப் பெறத்துடிப்பர். காவல் துறையினர், துப்பறிவாளர், வழக்கறிஞர் ஆகியோர் பிறரைக் கிண்டிக் கிளறுதலில் தேர்ச்சி மிக்கவர்கள். தன்னைத்தானே கேட்டுக்கொள்ளலும், பிறரை அறிவுடையராக்க வினாவுதலும் கிண்டிக் கிளறல் ஆகாது. குறை காண்பதற்காகக் கேட்பதே கிண்டிக்கிளறல் என்க. உண்மையறியவும் இது துணையாவதுமுண்டு.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிண்டிக்கிளறுதல்&oldid=1913030" இலிருந்து மீள்விக்கப்பட்டது