கிரகணமூளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரகணமூளி உள்ளக் குழந்தை
கிரகணமூளி உள்ளக் குழந்தை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கிரகணமூளி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. குழந்தைகளுக்கு வாயும் மூக்கும் இணைந்த நிலை.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Cleft lip and palate

விளக்கம்[தொகு]

  • பிறந்தக் குழந்தைகளுக்கு வாயும் மூக்கும் ஒன்றாகச் சேர்ந்த நிலையை (பிளந்த உதடும் குறைபாடுள்ள மேல்வாயுமான நிலை) கிரகணமூளி என்றும் சொல்லுவார்கள்...சூரிய கிரகணத்தைக் கர்ப்பிணிப் பெண்கள் பார்த்தால் இப்படிப்பட்ட மூளியான குழந்தைகள் பிறக்கும் என்பது ஒரு நம்பிக்கையாகும்...எனவே இந்தக் குறைக்கு கிரகணமூளி என்று பெயர்...இந்த மூளியில் பலவித தோற்றங்கள் உண்டு...பெண்கள் கருவுற்று இருக்கும்போது இயல்பற்ற முக வளர்ச்சியினால் கிரகணமூளி ஏற்படுகிறது...சிலவேளைகளில் இந்த மூளியானது முகத்தில் கண், காது, மூக்கு , கன்னம், நெற்றி ஆகிய பாகங்களையும் பாதிக்கும்...குழந்தைப் பிறந்தவுடன் அல்லது சிறு குழந்தையாக இருக்கும்போதே செய்யப்படும் அறுவை சிகிச்சையால் இந்த நிலையை முற்றிலுமாகக் குணப்படுத்திவிட முடியும்...

கிரகணமூளியின் பல நிலைகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரகணமூளி&oldid=1641562" இருந்து மீள்விக்கப்பட்டது