குத்துக்காற்சம்மட்டி வேர்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Indigofera Argentia...(தாவரவியல் பெயர்) or
- Indigofera Argentea...(தாவரவியல் பெயர்) or
- Indigofera pancifolia...(தாவரவியல் பெயர்)
குத்துக்காற்சம்மட்டி வேர், .
பொருள்
[தொகு]- ஓர் அரிய மூலிகை வேர்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a rare medicinal root
விளக்கம்
[தொகு]- குத்து + கால் + சம் + மட்டி = வேர் =குத்துக்காற்சம்மட்டி வேர்.
- பச்சைக் குத்துக்காற்சம்மட்டி வேர் இருபத்து நான்கு வகையான மகாவாதங்களையும், மேகக்கட்டிகளையும், திமிர் வாதம் மற்றும் மூர்ச்சையின் அயர்வையும் போக்கடிக்கும்...
- இந்த வேரை ஒரு எடைக்கு பத்து மடங்கு நீரில் கொதிக்கவைத்து ஆறியபின் வடித்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் தினம் இரண்டு, மூன்று வேளை கொடுத்துவர நஞ்சால் ஏற்பட்ட பல உபத்திரவங்கள் போகும்...
- உடம்பு வலுவைப் பொறுத்து அரை முதல் ஒரு பலம் வரை எடையுள்ள பச்சை வேரைப் பாலில் காய்ச்சி காலையில் கொடுத்தால் நன்றாக பேதி ஆகும்...இதனால் ஓடுவாயு, திமிர் வாயு, கட்டி ஆகியவை போகும்...
- இந்தச்செடியின் காம்புகளைக் கியாழமிட்டுக் கீல்களில் வந்த வலி, பிடிப்புகளுக்கு ஒற்றடம் கொடுக்க அவை மறையும்...அல்லது நோயுள்ள பாகத்தில் கியாழத்தைப் பொறுக்கக்கூடியச் சூட்டில் தாரையாக விட்டுக்கொண்டுவரக் குணமாகும்... அல்லது கியாழத்தை வேளைக்கு அரை, முக்கால் அவுன்ஸ் வீதம் சாப்பிடக்கொடுக்கலாம்...
- இரசகெந்தி விடத்தினாலுண்டான வாய்வேக்காடு இந்தக் கியாழத்தில் வாய் கொப்பளித்தால் ஆறும்...
- இது மிகச்சிறப்பு வாய்ந்த மூலிகை...இதை சாப்பிடும்போது பெரும் பத்தியம் இருத்தல் வேண்டும்...இது சம்பந்தமான கியாழம் அல்லது எண்ணெய் உட்கொள்ளும்போது, அவைகளைச் சாப்பிட்டு சிகிச்சையை குளித்து முடிக்கும்வரை எக்காரணம்கொண்டும் இரும்பைத்தொடக்கூடாது...இந்த செய்கை மருந்தின் வீறைக் கெடுத்துவிடும்...இந்த மூலிகையைக்கொண்டு குத்துக்காற்சம்மட்டி எண்ணெய் தயாரிப்பர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---குத்துக்காற்சம்மட்டி வேர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி