கொடைமிளகாய்
தமிழ்
[தொகு]இல்லை | |
(கோப்பு) |
capsicum annuum cultivar...தாவர இனம்
கொடைமிளகாய், .
- காரச்சுவை குறைந்த ஒரு மிளகாய் வகை.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- bell pepper
- capsicum grossum
விளக்கம்
[தொகு]குடத்தைப்போல் உருவமுள்ளதால் குட மிளகாய் எனப்பட்டு பிறகு கொடை மிளகாய் என்று மருவியது... இதை தஞ்சாவூர் மிளகாய் என்றும் கூறுவர்...இவை சிறிய வகையாகும்.. வடநாட்டு குளிர்ப் பிரதேசமான சிம்லாவிலிருந்து அறிமுகமானதால் சிம்லா மிளகாய் என்றும் பெயர் கொண்டது... தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் பயிரிடப்படும் பெரியவகையான, பல்வகை நிறமுள்ள, குடைமிளகாய் மிகப் பிரசித்திப்பெற்றது...இவை,பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கின்றன.....இது உலகம் முழுவதும் பெரும் வரவேற்புடைய காய்கறிகளில் ஒன்று...மிகக்குறைந்த காரச்சுவையும், இதமான ஒருவகை மணமும் இதன் குணங்கள்...இந்தியாவில் வடஇந்திய, தென்னிந்திய சமையல் முறைகளிலும் பயன்படுகிறது... கறி செய்யவும் புலவு, காய்க்கலவை, தயிர்ப்பச்சடி போன்ற இன்னும் பலவிதமான உணவு பதார்த்தங்கள் செய்யவும் பயனாகிறது...சிறு குடைமிளகாய்களைப் புளித்தத் தயிரில், உப்பிட்டு ஊறவைத்து வெயிலில் உலர்த்தி வத்தலாக்கி எண்ணெயில் பொறித்துத் தயிர் சாதத்தில் தொட்டுக்கொண்டும் உண்பார்கள்.