உள்ளடக்கத்துக்குச் செல்

கோநகர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
இந்தியாவின் கோநகரம் புது தில்லியிலுள்ள மக்களவைக் கட்டிடம்
தமிழக கோநகரம் சென்னையில் அரசு தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை
கோநகர்:
என்றால் கோவில் எனும் பொருளுமுண்டு--இது இலங்கை பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கோநகர், .

பொருள்

[தொகு]
  1. தலைநகரம்
  2. இராசதானி
    (எ. கா.) கோநக ரெதிர்கொள (சிலப். 27, 255)
  3. கோயில்
    (எ. கா.) மாயோன் கோநக ரெட்டும் (கந்த பு. திருநகரப். 88).

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. capital city
  2. seat of government
  3. temple

விளக்கம்

[தொகு]
  • கோ என்றால் அரசன் (ராஜா), கடவுள் என்று பொருள்...மக்களாட்சியில் ஒரு மாநிலத்தின்/நாட்டின் ஆளுனரே அரசனாவார்...ஆகவே அந்த அரசன் வாழுமிடம் கோநகர் ஆகிறது...ஓர் அரசின் தலைமைச் செயலகம், ஆளுகைத் தலைமை அலுவலகங்களும், தலைமை அரசு நிர்வாகிகள், தலையாய அலுவலர்கள், ஊழியர்கள், அரசின் தலைவரான ஆளுனர், முதலமைச்சர், அவரின் அலோசகர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வசிக்குமிடங்களும், சட்டங்கள் இயற்றவும், கொள்கை முடிவுகளை எடுக்கவும் அனைத்துத் தரப்போடும் விவாதித்து முடிவு செய்ய, அரசு கூட்டங்கள் நடத்தும் சபைக் கட்டிடங்களும் அமைந்திருக்கும் நகரமே கோநகர் ஆகும்...மொத்தத்தில் எந்த நகரை மையம் கொண்டு ஒரு நாடு/நிலப்பகுதி ஆளப்படுகிறதோ அந்த நகரே கோநகர் ஆகும்...
  • கோவில், கோயில் ஆகிய அர்த்தங்களும் 'கோநகர்' என்னும் சொல்லுக்குண்டு...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

ஆதாரம்....[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோநகர்&oldid=1407430" இலிருந்து மீள்விக்கப்பட்டது