கோவில் அண்ணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோவில் அண்ணன்:
என்னும் இராமானுசர்
கோவில் அண்ணன்:
என்னும் திருநாமத்தை இராமானுசருக்கு அளித்த ஆண்டாள் நாச்சியார்
(கோப்பு)
  • கோவில் + அண்ணன்

பொருள்[தொகு]

  • கோவில் அண்ணன், பெயர்ச்சொல்.
  1. வைணவப் பெரியார் இராமனுசர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. srivaishnavite saint Ramanujacharya.

விளக்கம்[தொகு]

  • திருமால் சமயமான விசிஷ்டாத்வைத வேதாந்தத்தை (ஸ்ரீவைஷ்ணவத்தை) மிகப் பெருத்த அளவில் பிரசாரம் செய்து மக்களிடையே பரப்பியவரான திருப்பெரும்பூதூரில் தோன்றிய இராமானுசருக்கு உள்ள மற்றத் திருப்பெயர்களில் கோவில் அண்ணன் என்பதொன்றாகும்...திருப்பாவை என்னும் நூலை அருளிச்செய்த ஆண்டாள் நாச்சியார் தனக்கு திருவரங்கத்து அரங்கனாதப் பெருமாளுடன் திருமணம் முடிந்தால், அழகர் கோவில் எனும் திருமாலிருஞ்சோலையில் அழகர்மலை அடிவாரத்தில் கோவில் கொண்டுள்ள சுந்தரராசப் பெருமாள் என்கிற கள்ளழகருக்கு நூறு தடா (அண்டா என்னும் பெரிய பாத்திர வகை) அக்கார அடிசலும்,அதே அளவு வெண்ணெயும், சமர்ப்பிப்பதாக மானசீகமாக நேர்ந்துக்கொண்டது போல அவர் இயற்றிய 'நாச்சியார் திருமொழி' என்னும் நூலில் குறிப்பு உள்ளது...
  • ஆனால் ஆண்டாள் நாச்சியார் அரங்கனாதனுடன் முன்னதாகவே ஐக்கியமாகிவிட்டதால் அந்த நேர்த்திக்கடனை அவரால் நிறவேற்ற முடியாமலேயே போய்விட்டது...பின்நாட்களில் அழகர் கோவிலுக்கு வருகை தந்த இராமானுசர் கள்ளழகருக்கு ஆண்டாள் வேண்டிக்கொண்டபடியே நூறு தடா அக்கார அடிசிலும், வெண்ணெயும் சமர்ப்பித்து ஆண்டாளின் அந்த வேண்டுதலை நிறைவேற்றினார்...இதற்குப்பிறகு இராமானுசர் யாத்திரையாக ஆண்டாள் பிறந்த ஊரான திருவில்லிபுத்தூர் சென்றபோது, பெரு மகிழ்ச்சியுற்ற ஆண்டாள் தனது அர்ச்சைநிலையை (அர்ச்சிக்கப்படும் விக்கிரகம்) மீறித் தோன்றி நன்றியுடன் இராமனுசரை அண்ணா என அழைத்ததாகச் சொல்லப்படுகிறது...அதிலிலிருந்து இராமானுசர் கோவில் அண்ணன் ஆனார்... இராமானுசர் ஆண்டாள் நாச்சியாரைவிட பல நூற்றாண்டுகள் பின்னரே தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது...



( மொழிகள் )

சான்றுகோள் ---[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோவில்_அண்ணன்&oldid=1394930" இலிருந்து மீள்விக்கப்பட்டது